அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
திருக்கழுக்குன்றம்
- ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் நடராஜர் சுவாமி சங்குதீர்த்தகுளத்தில்
எழுந்தருளி தீர்த்தவாரியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வருடந்தோரும்
மார்கழி மாதம் வரும் திருவாதிரை
நட்சத்திரத்தில் நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா
தரிசன விழா நடைபெறும். அதன்படி
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில்
கடந்த 2ஆம் தேதி 10நாட்கள்
நடைபெறும் மாணிக்கவாசகர் உற்சவம் துவங்கியது. உற்சவத்தின்
கடைசி நாளான நேற்று நடராஜர்
சுவாமிக்கும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கும் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு
அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நடராஜர்சுவாமி சங்குதீர்த்தகுளத்தில்
எழுந்தருளி தீர்த்தவாரியில் ஈடுபட்டு மீண்டும் சன்னிதானம் வந்தடைந்தார். அங்கு திருவாசக முற்றோதல்
பாடப்பெற்று ஓதுவரால் தேவார, திருவாசக ஊடல்
நடைபெற்றது.
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in