அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில்,திருக்கழுகுன்றம்
Arulmigu Thiripurasundari Amman Temple
திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில் 1259ம் ஆண்டிற்கு முன்னதாகவே கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள பழைய கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது முதலாம் ராஜகேசரி வர்மனுடைய காலத்து கல்வெட்டுகக்ள்.மூவுலகப் பேரழகியே இத் திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சியளிக்கிறாள்.
அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். திரிபுரசுந்தரி அம்பாள் மூர்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆக்கபட்டது.கார் கொண்ட சைவ குழலும் , ஒளி மேவும் தண் கதிர் நிகர் செழித்து கருணை கூர் விழிகளும், செங்குமுத வாயும் கனல் குழை விளங்கு காதும், ஏர் கொண்ட வெண்முத்துப்பற்களும்,ஆழியும் சங்கும் ஏந்தும் திருகைகளும், பொன் இலங்கும் மங்கள நானும், நீள் நறும் தாமரை மலர்த்திருவடிகளும் உடைய அம்மையின் பேரழகு மூவுலகை வெல்வதாகும்.
Arulmigu Thiripurasundari Amman Temple
Arulmigu ThiripuraSundri Amman Temple, Thirukazhukundram
திரிபுரசுந்தரி அம்மனுக்கு வருடத்தின் மூன்று நாள்கள் மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது.அதாவது ஆடி உத்திரம், நவராத்திரியில் வரக்கூடிய நவமி மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும், மற்ற நாட்களில் திரிபுரசுந்தரி அம்மன் திரு பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
Arulmigu ThiripuraSundri Amman Temple, Thirukazhukundram
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருவிளக்கு பூஜை
Arulmigu Thiripudasundari Amman Temple Vilakku Poojai
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவிலில் 25/02/2022 அன்று திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in