Thirukalukundram Temple Grivalam 2022
திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோவில் பவுர்ணமி கிரிவலம்
பௌர்ணமி கிரிவலம்
வேதமே மலையாக காட்சி யளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம்(pournami giri valam) மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின் (pournami giri valam) போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். மலைவலம் வரும் வழியில் மருந்துமலைச் சாரல் சஞ்சீவி காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத் தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகை ககாற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூடபோய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை கிரிபிரதட்சணம் செய்து இவ்விறைவனை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
1. January 17, 2022, Monday
2. February 16, 2022, Wednesday
3.March 17, 2022, Thursday
4.April 16, 2022, Saturday
5.May 15, 2022, Sunday
6.June 14, 2022, Tuesday
7.July 13, 2022, Wednesday
8.August 11, 2022, Thursday
9.September 10, 2022, Saturday
10.October 9, 2022, Sunday
11.November 8, 2022, Tuesday
12.December 8, 2022, Thursday
திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் திருக்கோவில் பவுர்ணமி கிரிவலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in