Maasi Magam மாசி மகம்
மாசி மக தீர்த்த வாரிவிழா 17.02.2022 அன்று நடைபெற்றது. மாசி மகம் கொண்டாடப்படுவதின் சிறப்பு:-ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.தீர்த்த வாரி அன்று தாழக்கோயிலிருந்து உற்சவர் சந்திரசேகரர் அம்பாளுடன் வந்து சங்குதீர்த்த குளத்தில் நீராடினார். அதுசமயம் பக்தர்கள் நூற்றுக்கணக்காணவர் சங்குதீர்த்த குளத்தில் நீராடினர். மாலையில் ஸ்வாமி அலங்காரம் செய்து தீபாரதணை செய்தபின்னர் ரிஷபவாகனத்தில் மாடவீதி வழியே தாழக்கோயில் சென்று அடைந்தார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in