திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் தல சிறப்புகள்
திருக்கழுக்குன்றம் இத்தலம் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து
தென் கிழக்கே 14 கிம் தொலைவில் உள்ளது. தேவாரம் பாடல்
பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில்
தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று ,அம்மூன்றுக்கு
உரிய தலங்கள் இரண்டு கோயிலும் கழுக்குன்றும்.
இந்த இரண்டு
தளங்களுள்ளும் கோயில் எனப்படும் தில்லையினும் சிவபிரான் காதலிப்பது கழுக்குன்றமே இம்மலையில்
பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலைமேல் தேவேந்திரனால் இடி அபிஷேகம் நடப்பதுண்டு.
1.கிருத யுகத்தில் சண்டன் பிரசண்டன் என்பவரும்
திரேதா யுகத்தில் சம்பாதி சடாயு என்பவரும், துவாபர
யுகத்தில் சம்புகுந்தன் மாகுந்தன்
என்பவரும் கழுகு வடிவுடன் இறைவனை பூசித்து பேறு
பெற்றமையால் கழுக்குன்றம் என இம்மலை பெயர் பெற்றது.சம்பு ஆதி எண்ணும்
முனிவர் இருவரும் கழுகு வடிவுடன் நாள்தோறும் இத்திருமலைக்கு வந்து இறைவனை வலம்
வந்துதரிசித்து பிரசாதம் உண்டு போவதை காணலாம்.ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த அருணகிரியார் கழுகு
தொழு வேதகிரி என பாடியுள்ளார் .தேவார திருவாசகத்தில் சொல்லப்பட்ட
திருக்கழுக்குன்றம் என்னும் பெயரே இன்றும் நிலவுகிறது.
2.இத்தலத்து
பெருமான் சுந்தர மூர்த்திக்கு பொன் அளித்தார், மாணிக்கவாசகருக்கு
திருப்பெருந்துறையில் காட்டிய குரு வடிவை இங்கு மீண்டும் காட்டினார்.அப்பர்
பெருமான் இம் மண்ணுலகை நீங்கு முன் கழுகுன்றத்து உச்சியாய் ;உன்னடிக்கே பொத்துகின்றேன் என இத்தலத்து
பெருமானை நினைந்து அழைத்தனர்.
3.இத்தலத்திற்கு உலகளந்த
சோழபுரம், ருத்ரகோடி என்றும் பெயர் உலகளந்த சோழபுரம் என்பது பழைய
கல்வெட்டில் உள்ள பெயராகும்.இத்திருமலை சுமார் 500 உயரமும் 2 பர்லாங்கு சுற்றளவு கொண்டது.
4.இத்திருமலையில் அமைந்துள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் வாழை பூவின் உருவில்
மணலால் ஆனது சுயம்பு லிங்கத்தின் மேல் கவசத்தினால் மூடப்பட்டிருக்கிறது.
5.பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் பாண்டிய அரசனாகிய ஜடா வர்மர் சுந்தர பாண்டியநாள் கட்ட பட்டது.
6.கார்த்திகை திருநாளில் நாடெங்கும்
திருப்பதிகள் தோறும் திருவிளக்கேற்றி ஓளி விழா கொண்டாடினாலும் திருவண்ணாமலையிலே
கார்த்திகை தீபம் சிறப்புடையதாக போற்றப்படுகிறது,காரணம் இறைவன்
ஒளி வண்ணமாய் எழுந்த பெருமை மிக தளம் திருவண்ணாமலை, அதுபோல திருமுறைத் திருவிழா நாட்டில் பல
திருப்பதிகளில் பல வகையாய் நடந்து வந்தாலும் திருக்கழுக்குன்றத்தில் மறையிசை
பெருவிழா மாணிக்கவாசகர் திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கின்றது. இங்ஙனம் ஒளி
மலையும் ஒலி மலையுமாய் திகழும் இரு மலைகள்
திருவண்ணாமலையும், திருக்கழுகுன்றமாகும் இந்த இரு தலங்களையும்
ஞானசம்மந்தர்
“அண்ணாவும் கழுக்குன்றும் ஆயமலை யவையாழ்வார்”
என்று ஓரிடத்தில் இக்காரணம் தோன்ற இணைத்து
பாடி மகிழ்க்கின்றார்.அண்ணா இங்கே
திருவண்ணாமலை
7.வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் "வேதகிரி" எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம்,கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயிலும்,ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோயில்,தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகின்றன.
8.மலைக்கோயிலில் இறைவன் வேதகிரிஸ்வரர் என்ற பெயரிலும், தாழக்கோயிலில் இறைவன் பக்தவத்சலேசுவரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம்,அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும்,அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.
9.மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது. 500 அடி உயரம் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
10. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரிஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் திரிபுரசுந்தரி அம்மன் என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in