Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple History
இத் திருக்கழுகுன்ற தலத்திற்கு உலகளந்த சோழபுரம், ருத்ரகோடி என்றும் பெயர் உலகளந்த சோழபுரம் என்பது பழைய கல்வெட்டில் உள்ள பெயராகும்.இத்திருமலை சுமார் 500 உயரமும் 2 பர்லாங்கு சுற்றளவு கொண்டது. திருக்கழுக்குன்றத்தில் மூன்று கோயில்கள் உள்ளன.மலைமேல் உள்ள கோயில் தான் மிகவும் புராதன திருக்கோயிகாகும்.இத்திருக்கோவிலின் கருவறை மூன்று பெருங்கற்பாறைகளால் ஆனது, கருவறையின் உட்புறத்தில் மேற்கு பக்கம் மும்மூர்த்திகளின் உருவங்கள் , வடக்கு பக்கம் யோகா தக்ஷிணாமூர்த்தி, தெற்கு பக்கம் நந்திகேஸ்வரர், சண்டேஸ்வரர், உருவங்களை காணலாம்.
கழுகு வடிவுடன் இறைவனை பூசித்து பேறு பெற்றமையால் கழுக்குன்றம் என இம்மலை பெயர் பெற்றது.சம்பு ஆதி எண்ணும் முனிவர் இருவரும் கழுகு வடிவுடன் நாள்தோறும் இத்திருமலைக்கு வந்து இறைவனை வலம் வந்துதரிசித்து பிரசாதம் உண்டு போவதை காணலாம்.ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த அருணகிரியார் கழுகு தொழு வேதகிரி என பாடியுள்ளார் .தேவார திருவாசகத்தில் சொல்லப்பட்ட திருக்கழுக்குன்றம் என்னும் பெயரே இன்றும் நிலவுகிறது.
இத்திருமலையில் அமைந்துள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் வாழை பூவின் உருவில் மணலால் ஆனது சுயம்பு லிங்கத்தின் மேல் கவசத்தினால் மூடப்பட்டிருக்கிறது.இத்திருமலையில் சிவபெருமான் எதிரே நந்தி இல்லை, உச்சி வேளையில் தினம் இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கும் உணவை அருந்தி செல்கின்றன. 1681 ஆம் ஆண்டில் கழுகுகள் உணவு அருந்துவதை பார்த்ததாக டச்சுக்காரர் குறிப்பிட்டுள்ளார்.. .
கழுகுகள் இறைவனை வணங்குவதாலும் சங்கு தீர்த்தத்தில் சங்கு பிறப்பதாலும் இத்தலத்தின் பெருமையை பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் பரவியிருப்பதால் வடக்கில் இருப்போர் பக்ஷி தீர்த்தம் என்றே இத்தலத்தை இன்றும் நாடி தமது யாத்திரையில் இத் திருக்கழுக்குன்றத்திற்கு வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். இத்திருமலையின் பெருமை உணர்ந்தே சுந்தரமூர்த்தி நாயனார் “கழுகுன்றத்தை தொழுமின்” என்று முதல் ஐந்து பாடல்களில் அம்மலை தொழுவதே போதுமானது, பயன் தரும் என்பதை விளக்குகின்றார்.
வேதங்களே இத்திருமலை உருவமாக நிற்கின்றன,வேதங்கள் இறைவனது திருவடிக்கு கீழ் என்றும் இருக்க விரும்ப இறைவனும் வேதங்களை நோக்கி
குன்றென நின்மின் நுங்கள்
கொழுந்திடை அடைவோம் யாமே
எனக்கூறினார்.
அங்ஙனமே வேர்பாகம் இருக்கு வேதமும், நடுபாகம் யசுர் வேதமும்,முடிபாகம் சாம வேதமும், சிகரம் அதர்வண வேதமும் ஆக இம்மலை உருவாய் வேதங்கள் நிற்கின்றன.
இத்தலத்து பெருமான் சுந்தர மூர்த்திக்கு பொன் அளித்தார், மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்டிய குரு வடிவை இங்கு மீண்டும் காட்டினார்.அப்பர் பெருமான் இம் மண்ணுலகை நீங்கு முன் கழுகுன்றத்து உச்சியாய் ;உன்னடிக்கே என இத்தலத்து பெருமானை நினைந்து அழைத்தனர்.
இத்தலத்து பெருமான் அடியார்க்கு நல்லார் என்பது அவர் ஞாச்சிழத்து எங்கணும் கன்னிகைக்கு அளித்த பெறும் பேற்றால் அறியக் கிடைக்கின்றது. நாள்தோறும் திருமலைக்கு சென்று இறைவன் முன்னிலையில் திருக்கழுக்குன்ற மாலை போன்ற பாடல்களை பாடி பணிந்து வருவது வழக்கம் ஒருநாள் பெரு மழையால் திருமலைக்கு செல்ல முடியாமல் தன வீட்டிலிருந்த படியே எம்பெருமானே இம் முற்றத்திலே வந்து முன் நிற்கில் எளியேன் பாடி மகிழ்வேன் எனக்கூறி இறங்கி
பெற்றத்தி லேவருங் கோலமும் தாமுமென் பெண்மையுய்ய
முற்றத்தி லேவந்து முன்நிற்கி லோ முது வானவர்தம்
சுற்றத்தி லேகதிர்த் தோற்றத்தி லேதோல்லை நான்மறைநூல்
அற்றத்தி லே கழுக் குன்றத்தி லேகிற்கும் அற்புதனே
என்னும் பாடலை பாடி மனமுருக இறைவர் இவள் வீட்டு முற்றத்தில் காட்சி தர பேரானந்தத்துடன் வணங்கி எழுந்தாள். பின்னர் இறைவன் எழுந்தருளும் போது அவரை பிரிய மனமில்லாமல் இடப வாகனத்தின் திருவடியை இவள் பிடித்துக்கொண்டு கயிலைக்கு சென்றார்.
கன்னிராசி பரிகார ஸ்தலம்
கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும்,இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இப்போது அவைகள் வருவதில்லை.
சங்கு தீர்த்தம்: கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் தாழக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு 12
அநுக்கி ரக நந்திகேஸ்வரர்.
திருமாள் வழிப்பட்ட திருக்கழுக்குன்றம் தலம்
திருமால் உபேந்திர பதவியில் இருக்கும் போது தேவர்கள் அவரிடம் வந்து அரக்கர்கள் தங்களை துன்புருத்து வதினின்றும் காக்குமாறு வேண்டினர். திருமால் அவர்கள் வேண்டு கோளுக்கினங்கி அவுனர்களை கொல்வதற்குச் சென்றனர். அவுனர்கள் பயந்து ஓடி வனத்தில் புகுந்தனர். வனத்தில் இருந்த பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து பிருகு பத்தினியிடம் தங்களை காக்குமாறு வேண்டினர். அவ்வம்மையார் அவர்களை ஆசிரமத்தில் ஒளித்து வைத்து வாயிற்படியில் ஒருசட்டு வத்துடன் நின்றனர். அரக்கர்களை தேடிவந்த திருமால் பிருகு முனிவரின் மனைவியை நோக்கி அரக்கர்கள் உங்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் வழி விடுங்கள் என்றார். அவ்வம்மையார் அடைக்கலமாக வந்தவர்களை விடுவது அறமன்று என்றார்.
திருமால் அறிவுள்ள பிருகுப த்தினியே!
நீ அரக்கர்களை விடாமல் தடுத்தனை எனக் கோபித்து அவ்வனம் முழுவதும் தீயில் முழுகும் படி சக்கரத்தை ஏவினார். அந்த சக்கரம் அந்த காடும், அரக்கர்க்ளும் பிருகு முனிவரின் பத்தினியும் வேகும்படி கோபதத்துடன் சுட்டது. சிவப்பெருமானால் முப்புரத்தவர்கள் இறந்தது போல் அவ்வரக்கர்களும் முனிவரின் மனைவியும் அழிந்தார்கள்
அவ்வமயம் பிருகு முனிவர் அங்கு வந்தார். தன் மனைவியும் பெரிய வனமும் அழிந்தது. திருமால் ஏவிய சக்கரப் படையால் என்றறிந்து, தன் மனைவியிடத்து வைத்து அன்பினால் மனம் வாடினார். இத்திருமால் திருமகளை விரும்பிய காதலை யுடையவன். பின் வருவதை யறிகிலன், பெண் கொலையையும் கருதவில்லை. அடைக்கலமாக வந்தவர்களை காப்பது அறமாகும். இச்செயலைச் செய்த என் மனைவியைக் கொன்றது அறமாகுமோ எனத்திருமாலை நோக்கி நீ சக்கரமேந்தியது அனைவரையும் காப்பதற்காகும். தேவர்களுக்கு நன்மையும் மேன்மையும் செய்யும் தவத்தினரைக் கொல்வதற்கன்று. என் மனைவியைக் கொன்று துன்பத்தினை விளைவித்த நீ எடுக்கும் பத்து ப்பிறவியில் ஊரையும் விட்டு, அறிவு மயங்கி உயிர் வனத்திற்கு போய் மனைவியைப் பிரிந்து நீயும் தவிக்கக்கடவை எனச் சாபமிட்டார்.
திருமால் பிருகு முனிவரை நோக்கி உமது மனைவியை இப்போது எழுப்பித் தருகிறேன். என் குற்றத்தைப் பொறுத் தருள வேண்டும் என்று அவர் மனைவியை கொன்ற சக்கரத்தை எதிரில் வைத்து, தன்கால் பெரிய விரலைப் பூமியில் ஊன்றினர். ஊன்றிய இடத்தில் குளிர்ந்த நீருண்டாகியது. அந்த நீரைப் பிருகு முனிவரின் மனைவின் எலும்பு கூடு மீது தெளித்தார். தெளித்தவுடன் அவள் உயிர் பெற்றெழுந்தாள். பிருகு முனிவர் மகிழ்ந்து பலவாறு புகழ்ந்து இந்த நாளில் நானிட்ட சாபப்படி அந்த நாளில் தேவர்களுக்கு உதவியாய் நீ செல்லுங் கானகத்தில் உன் மனைவியை பிரிவாய் .பிறகு நீ அரக்கர்களை கொன்று உன் மனைவியை அடைவாய். நீ முனி பத்தினியை கொன்ற பாவம்நீங்க வேதகிரியை அடைந்து பூசிப்பாயாக எனக் கூறினார்.
பிறகு திருமால் வேதகிரியை அடைந்து திருமஞ்சன நீர் திருப் பள்ளித் தாமம் முதலியவற்றைக் கொண்டு வேத நெறிப்படி பூசனை செய்து வேதகிரீசன் திருவருளை பெற்று தம்பதம் சென்றார். திருமால் அதற்கு முன்னும் திரிபுரத்தில் இருந்த அவுனர்கள் செய்யும் சிவபூசை வழுவும் படி செய்த மாயத்தால் விளைந்த பாதகம் தொலையும் படியும் பிறகு கிருட்டினனாகப் பிறந்த போது மாமனைக் கொன்று பாதகமும் தொலைய வேதகிரி வந்து பூசித்து தொழுது சென்றார். நாராயணன் வழிபட்டதால் இத்தலத்திற்கு ”நாராயணபுரி”எனும் பெயருண்டாகியது
பாடல் பெற்ற திருத்தலம் ஒரு நாவால் உலகை ஆண்ட திருஞாவுக்கரசரும், சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தரும், தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்திசுவாமிகளும், தெய்வத் திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், அருந்தவ புதல்வர் அருணகிரி நாதரும் பைந்தமிழ்ப் பாவேந்தர் பட்டினத்தாரும் காதலால் கசிந்து உருகிக் கண்ணிர் மல்கப் பாடியுள்ள திருத்தலம்.
இந்திரன் வணங்கும் தலம்
மலை மேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற் போல் கோயில் விமானத்தில் ஒருதுவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
TIRUKALUKKUNDRAM Kanni Raasi Parikara Temple
In This Tirukalukundram temple at the top of the hill, the Vedhagiriswarar Shiva is facing east; Vedhagiriswarar is a Swayambu: it is protected by a Kavacham. At the foot of the Linga is the figure of Markandeya.
On the Northern wall, figure of Yoga—Dakshinamurthi is found. There are also other figures like those of Brahma, Vishnu, Nandhi, Sandeswar. Somaskandar, Boga Sakthi etc.
The sannadhi
of Goddess Chockammal is in the inner Prahara facing north. Sthalavritcha is
the Banana Tree.
Thiruppam Tharum Annai ThiripuraSundari Amman
Annai Thirupurandhari Amman is a Swayambhu in this thirukalukundram Temple,Thiripura sundari Amman is Murtam and Ashtangaanth were made of eight eight kinds of perfume. Only during the three days of year in Aadipuram,Panguni Uthiram, Navami coming in Navratri The whole anointed On the other day, poojai is taking place only at the Lord's feet, Thirupizha is celebrated 10 days in Tirupurandhari Amman during Aadi Month.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in