அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்.
திருக்கழுக்குன்றம் - ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் நடராஜர் சுவாமி சங்குதீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
வருடந்தோரும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.. உற்சவத்தின் கடைசி நாள் நடராஜர் சுவாமிக்கும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கும் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின்னர் நடராஜர்சுவாமி சங்குதீர்த்தகுளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அங்கு திருவாசக முற்றோதல் பாடப்பெற்று ஓதுவரால் தேவார, திருவாசக ஊடல் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in