அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் சங்கு தீர்த்தம்
Arulmigu Vedhagiriswarar Temple Sangu theertham
சங்குதீர்த்தம் ஆழ்ந்த
கன்றதாகவும் மழைவளம் குறைந்த காலத்தும் வற்றாத நீரூற்றை உடையதாகவும் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை சங்குபிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும்
இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது
மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்த
பிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருகவேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர்.
ஒருமுறை மார்கண்டேயர் markanteyar திருக்கழுகுன்றத்திற்கு (Thirukalukundram) வந்தார். அப்போது அங்கு உள்ள குளத்தில்(sangutheertham ) நீராடி சிவனுக்கு அபிசேகம்(abishakam) செய்ய தண்ணீர் எடுத்து செல்ல பாத்திரம் இல்லாமல் ஈசனை வேண்டினார். பரம்பொருளின் அருளினால் பெரியதொரு வலம்புரிச் சங்கு(Sangu) இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது.
அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்கண்டேயர் markanteyar, அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூசித்தார். எனவே அக்குளத்திற்கு சங்கு தீர்த்தம் (sangutheertham ) என்று பெயர். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்குதீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு Sangu தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது. அந்த குளத்தில்(sangutheertham ) இன்று வரை சங்கு(sangu) பிறக்கிறது. மேலும் சங்கு பிறப்பதற்கு முன்னாள் குளம்(sangutheertham ) முழுவதும் நுரை கிளம்புவதை காணலாம் . கடைசியாக 1-9-2011 அன்று சங்கு பிறந்தது.
Arulmigu Vedhagiriswarar Temple Sangu theertham
திரு மலையை சுற்றி அமைந்த 14 தீர்த்தங்கள்
1. இந்திர தீர்த்தம்.
2.சம்பு தீர்த்தம்.
3. உத்திர தீர்த்தம்.
4. வசிட்ட தீர்த்தம்.
5.சங்கு தீர்த்தம்.
6. மெய்ஞான தீர்த்தம்.
7. அகத்திய தீர்த்தம்.
8. மார்க்கண்ட தீர்த்தம்.
9. கோசிக தீர்த்தம்.
10. நந்தி தீர்த்தம்.
11. வருண தீர்த்தம்.
12. அகலிகை தீர்த்தம்.
13. பட்சி தீர்த்தம்.
14. இலட்சுமி தீர்த்தம்.
சங்கு தீர்த்தத்தில் நதிகளின் நீராடல் :
இத்திருத்தலத்தில் சங்கு தீர்த்த புஷ்கரமேளா நடைபெறுவதற்கு இன்னொரு சுவையான வரலாறும் கூறப்படுகிறது.
அனகை, அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை காவேரி, சிங்கை சிந்து சோமம், சோவதி, தாமிரபரணி, துங்கபத்திரா, தென் குமரி, தேவிகை, நர்மதை, நந்தினி, பம்பை, பாலி பிராமி, பினாகி, மலப்பிரதாரினி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை, வேத்தராவதி, கைதாரிணி, வைகை முதலிய நதிகளுக்குள், யார் உயர்ந்தவர்கள் என்ற சண்டை உருவானது. ஒவ்வொருவரும் தாங்களே உயர்ந்தவர்கள் என்று இறுமாப்பு கொண்டனர்.
அனைத்து நதிகளும் இத்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி வேதகிரீஸ்வரரை வழிபட முடிவு செய்தன. அதன்படி இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டன. அப்போது இறைவன் அவர்கள் முன்பாக தோன்றி, ‘இத்தலத்தில் தேங்கி நிற்கும் சங்கு தீர்த்தம், இறைவனான எனக்கு அபிஷேகம் செய்ய சங்கை உற்பத்தி செய்கிறது.
அதைக் காட்டிலும் நீண்ட நெடிய நதிகளாகிய நீங்கள் உயர்ந்தவர்களா? என்பதை முடிவு செய்யுங்கள்’ என்று கூறி மறைந்தார். நதிகள் அனைத்தும் வெட்கி தலைகுனிந்தன. பின்னர் தாங்கள் இறுமாப்பால் செய்த பாவங்கள் விலக இந்த தீர்த்த குளத்தில் நீராடின. அந்த தினம் குரு பகவான் கன்னி ராசியில் புகுந்த நாளாகும். எனவே இந்த நாளில் அனைத்து நதிகளும், இத்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடுவதாக ஐதீகம்.
Arulmigu Vedhagiriswarar Temple Sangu theertham
சங்கு தீர்த்த புஷ்கர மேளா
மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார்.
இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.
ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான்.
பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.
அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர்.
இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது.
இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்கிறார்கள்.
Arulmigu Vedhagiriswarar Temple Sangu theertham
சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ வாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. கடைசியாக கடந்த 1.9.2011 அன்று சங்கு பிறந்தது. அந்த சங்கைக் கொண்டுதான், சங்கு தீர்த்த புஷ்கர மேளாவின் போது இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோவிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in