Thirukalukundrtam Temple

Thirukalukundrtam Temple

ஊர் : திருக்கழுக்குன்றம் ( பட்சி தீர்த்தம் )

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருமலை

இறைவி : அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர் பெரியகோவில்

தல விருட்சம் : கதலி / வாழை மரம்

தீர்த்தம் : சங்கு தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Arulmigu Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்




Thirukalukundram Arulmigu ThiripuraSundari Amman and Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham,Tamil Nadu - India

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை) திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

திருக்கழுக்குன்றம் இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 15km தொலைவில் உள்ளது.. தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில் தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று.இத் திருக்கழுக்குன்றம் திருமலை மேலுள்ள சிவ தலங்களில் முதன்மையான திருத்தலத்தில் நான்கு வேதங்கள் மாமலையாக அமைந்து அதன் உச்சியில் இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருகிறார். இந்த திருக்கழுக்குன்றத்தில் திருமலை உச்சியில் உள்ள வேதகிரீஸ்வர் திருக்கோவிலுக்கு அருகில் பூஷா, விருத்தா என்னும் முனிவர்கள் தம் பாவங்கள் தீர கழுகு வடிவில் தினசரி காலை 11.30 மணியளவில் வந்து உணவு அருந்தி செல்கின்றன,அதனால் திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கழுக்குன்றம் என்று ஊருக்கு பெயர் பெற்றது.கழு என்றால் "சூலம்" என்று பொருள். சூலத்தின் மூன்று முனைகளை போல் இம்மலை தோன்றுவதனால் கழுக்குன்றம் என்றும் பெயர் உண்டாக்கியது.

Thirukalukundram Vedhagiriswarar - Bhakthavatchaleswarar

இத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது

மார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது சங்குதீர்த்த கரையில் பூஜை செய்தார்.அப்போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால், அவர் தம் போக சக்தியால் இந்த சங்குதீர்த்த குளத்தில் இருந்து சங்கு மேலே வந்தது.அந்த சங்கினால் பூஜை செய்தார்,அவர் பூஜை செய்த இடத்தில் தீர்த்தகரைஈஸ்வரர் அல்லது மார்கண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்போதும் 12 ஆண்டிற்கு ஒரு முறை இத்திருக்குளத்திலிருந்து சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

Thirukazhukundram Arulmigu Vedhagiriswarar Temple,Thirukalukundram

Thirukalukundram hill Temple is one of the famous shiva temple in tamilnadu. Thirukalukundram Temple is located in 14 km from Chengalpattu,70km from Chennai,and 17 km from Mamallapuram. In this Thirukalukundram Temple God Name is Vedhagiriswarar,And Godess name is Thiripurasundari Amman. Thirukalukundram Vedhagiriswarar Temple is one of the 274 thevaram paadal petra sthalam of God Shiva.

புதன், 22 டிசம்பர், 2021

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Sangutheertham


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Sangutheertham

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வர திருக்கோவில் சங்கு தீர்த்த குளம்

செவ்வாய், 21 டிசம்பர், 2021

Arulmigu Vedhagiriswarar Temple, Thirukalukundram

திருச்சிற்றம்பலம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி  
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே -எல்லை  
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்  
திருவாசகம் என்னும் தேன்.

#எட்டாம்திருமுறை -#திருவாசகம் -#திருக்கழுக்குன்றம் -#ஸ்ரீமத்மாணிக்கவாசகர் -#திருக்கழுக்குன்றபதிகம்
#30

திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபிரான் ஞானகுருவாக எழுந்தருளி திருவாதவூரருக்கு சிவஞானங் காட்டி திருவடி தீட்சை வழங்கிய பின் அருளிச்செய்த திருவாசகம் 

சிவபெருமானே திருவாதவூராரை மாணிக்கவாசகர் என திருநாமம் சூட்டி பின் மாணிக்கவாசகர் சிவபெருமானின் அநாதி பெருமையை சொல்ல சொல்ல அந்த இறைவனே தம் திருமேனி திருக்கரத்தினால் எழுதப்பட்ட திருவாசகம்.

இத்தலத்தில் அடிகட்கு இறைவன் முன்னர்த் திருப்பெருந்துறைக்கண் வந்து ஆட்கொண்ட கோலத்தையே காட்டினான் என்பது இதன்கண் இனிது விளங்கிக் கிடத்தலானும், புராணமும் அங்ஙனமே கூறுதலானும் இதற்கு, `குரு தரிசனம்` என்றே குறிப்புரைத்தனர் முன்னோர். ஏழு திருப்பாட்டுக்களையே உடையதாயிருத்தலின், ஏனைய பாட்டுக்கள் கிடைத்தில என்க.

குரு தரிசனம்
அஃதாவது, அடிகள், இறைவன் தமக்கு அருள் புரிந்த ஞானாசிரியன் கோலத்தைக் கண்ட காட்சியின் சிறப்பைக் கூறியது.

#திருக்கழுக்குன்றப்பதிகம்

#பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (01)
- - - - -
பொழிப்புரை :
பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி, நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (02)
- - - - -
பொழிப்புரை :
பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (03)
- - - - -
பொழிப்புரை :
என் கண்ணீர் துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! நான் உன்னை விட்டு நீங்கினேன்; மேல் விளையும் காரியத்தை அறிந்திலேன்; உன் திருவடி இரண்டையும் வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக் கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#பூணொ ணாததொ ரன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. (04)
- - - - -
பொழிப்புரை :
உன் அன்பர் உன்னிடத்தில் பேரன்பு பூண்டு வணங்கக் கண்டு, நான் மிக்க நாணம் அடைந்து, துன்பக் கடலில் அழுந்தி, திருப்பெருந்துறையாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தலும், நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காணமுடியாத உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (05)
- - - -
பொழிப்புரை :
அழகிய திருவுருவம் உடையவனே! திருப்பெருந் துறைக் கொண்டலே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் மனத் தில் வைக்கப் பட்டிருக்கிற சிகாமணியே! உலகமே சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#பேதம் இல்ல தொர்கற் பளித்த
பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. (06)
- - - - -
பொழிப்புரை :
வேறுபடுதல் இல்லாத ஒப்பற்ற கல்வியாகிய ஞானத்தை அருள்செய்த திருப்பெருந்துறை இன்பப் பெருக்கே! பல தீமைகள் பேசும்படி என்னை அயலார் முன்னே நீ என்ன காரியம் செய்து வைத்தாய்?. முடிவற்றனவும், தீங்கற்றனவுமாகின உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் எனக் கருதி ஆசையோடு உன்னைப் புகழும் வண்ணம் நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -

#இயக்கி மார்அறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்ம லப்பழ
வல்வி னைக்குள் அழுந்தவும்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே. (07)
- - - - -
பொழிப்புரை :
இயக்கிமார் அறுபத்து நால்வரைத் தன் ஞானோபதேசத்தால் எண்குணமும் அடையச் செய்த ஈசனே! மயக்கத்துக்கு ஏதுவாகிய மும்மல சம்பந்தமாகிய வல்வினைக் கடலில் அடியேன் அழுந்தி நிற்கவும் என் தளர்ச்சியை நீக்கி, என்னை ஆண்டருளி, உன் திருவடிகளைத் தந்து அடியார்களுக்கு எதிரில் திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.
- - - - -
#ஸ்ரீமத்மாணிக்கவாசகசுவாமிகள்

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

Thirukalukundram Arulmigu Vedhagireeswarar Temple Aarudhra Tharisanam


அருள்மிகு ஸ்ரீவேதகிரிஸ்வர்(  மலை) திருக்கோயில் ஆரூத்ரா தரிசனம்

திங்கள், 20 டிசம்பர், 2021

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Aarudhra Tharisanam

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Aarudhra Tharisanam
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Aarudhra Tharisanam
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Aarudhra Tharisanam
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Aarudhra Tharisanam
Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Aarudhra Tharisanam

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

திருக்கழுக்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ராஜ லிங்கேஸ்வரர் கோவில்


திருக்கழுக்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ங் ராஜ லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை பவுர்ணமி அலங்காரம் துளசி மாலை அலங்காரம் நெல்மணி அலங்காரம் திருநீறு அலங்காரம் மாதுளம் பழ அலங்காரம் ரூபாய் நாணய அலங்காரம் தர்பை அலங்காரம் மல்லிகை பூ அலங்காரம் பன்னீர் ரோஸ் அலங்காரம் மஞ்சள் அலங்காரம் என 12 மாதத்திற்கும் 12 அலங்காரம் செய்யப்பட்ட அற்புதக்காட்சி மொத்த தொகுப்பு

வியாழன், 16 டிசம்பர், 2021

manikavasakar Thiruvizha


திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் மாணிக்கவாசகர்  பெருமான்
ஐந்தாம் நாள் உற்சவம்

thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Manikavasakar thiruvizha

மாணிக்கவாசகர் ஸ்வாமி ஆறாம் நாள் திருவிழா அலங்கார தீபாரதனை

திங்கள், 13 டிசம்பர், 2021

Shiva Temples


*அபூர்வமான சிவ பொக்கிஷம் இது

(பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்)

நிச்சயம் நம் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

 *தேவாரம்  பெற்ற தலங்கள்* 

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44.

2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52.

3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13.

4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  2.

5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111.

6. அப்பர் மட்டும் பாடிய தல
  மொத்தம்              275.

 7. இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள்                             25

 *சிவஸ்தலத்   தொகுதிகள்* 

       *வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்*         

1.            அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்

1. திருக்கண்டியூர்          ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர்         ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை             ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர்          ---  தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி            ----  சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை         --- காமனை எரித்தது
8. திருக்கடவூர்           ---- யமனை உதைத்தது

2.     *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்* 

1. கேதாரம் (இமயம்)         ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்)      ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி)       ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம்  (மகாராஷ்டிரம்)  ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்)       ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)   ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்)           --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்)          ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்)        ---- இராமநாதேஸ்வரர்

     *முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்* 

1. திரு ஆரூர்          ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம்           ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை  ---- நினைக்க முக்தி தருவது
4. காசி                ---- இறக்க முக்தி தருவது

 *பஞ்சபூத ஸ்தலங்கள்* 

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம்    ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா                   ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை                ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி                      ----- வாயு (வளி)
5. சிதம்பரம்                          ---- ஆகாயம் (விசும்பு)

           *நடராஜருக்கான பஞ்ச சபைகள்* 

1. திருவாலங்காடு     --- இரத்தின சபை
2. சிதம்பரம்           --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை             --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி      --- தாமிர சபை
5, திருக்குற்றாலம்     --- சித்திர சபை

   ( *வியாக்ரபாதர் வழிபட்டவை)  புலியூர்கள்* 

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

    *சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்* 

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த *தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.* 

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. *திருஆரூர்*  -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. *திருநள்ளாறு* -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. *திருநாகைக்ரோணம்* --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. *திருக்காறாயில்* --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. *திருக்கோளிலி*  -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. *திருவாய்மூர்*   ---- நீலவிடங்கர்  --- கமல நடனம்
7. *திருமறைக்காடு* --- புவனிலிடங்கர் --- கம்சபாத

       *சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்* 

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர்  ---- *ஆனந்த தாண்டவம்* .

2. திரு ஆரூர்                       ---- *அசபா தாண்டவம்* .

3. மதுரை                           ---- *ஞானசுந்தர தாண்டவம்.* 

4. புக்கொளியூர்                     ----. *ஊர்த்துவ தாண்டவம்.* 

5. திருமுருகன் பூண்டி              ---- *பிரம தாண்டவம்* 

  *சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்* 

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

 *காசிக்கு ஈடான ஸ்தலங்கள்* 

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

   *நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்* 

1.  *நந்தி சங்கம தலம்*             --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்).

2.   *நந்தி விலகியிருந்த தலங்கள்*  ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி
(அப்பர், சம்பந்தருக்காக).

3.    *நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம்* --- திருவெண்பாக்கம்.

4. *நந்திதேவர் நின்ற திருக்கோலம் -* 
-- திருமாற்பேறு.

5.  *நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம்* --- திருமழபாடி.

6.            *திருக்கீழ்வேளூர்* – ஒரு பக்தையின் பொருட்டு.

7.  *திருநள்ளாறு* – ஒரு இடையனுக்காக

             
 *சப்த ஸ்தான* (ஏழூர் விழா)  தலங்கள்

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

   *திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்* 

1. *திருவோத்தூர்*    --- ஆதிகேசவப் பெருமாள்
2. *கச்சி ஏகம்பம்*    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. *கொடிமாடச் செங்குன்றூர்* --- ஆதிகேசப் பெருமாள்
4. *சிதம்பரம்*       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. *திருநணா*       --- ஆதிகேசவப் பெருமாள்
6. *சிக்கல்*          --- கோலவாமனப் பெருமாள்
7. *திருநாவலூர்*    --- வரதராஜப் பெருமாள்
8. *திருநெல்வேலி*  --- நெல்லை கோவிந்தர்
9. *திருப்பழனம்*    --- கோவிந்தர்
10. *பாண்டிக் கொடுமுடி* --- அரங்கநாதர்
11. *திருப்பத்தூர்*     --- அரங்கநாதர்
12. *திருவக்கரை*     --- அரங்கநாதர

 *ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்* 

   *உட்கோயில்*                            கோயில்

1. *திருவாரூர்* அரநெறி                 ----   திருவாரூர்
2. *திருப்புகலூர்* வர்த்தமானீச்சுரம்       ---    திருப்புகலூர்
3. *மீயச்சூர்* இளங்கோயில்             ----  மீயச்சூர்

              *காயாரோகணத் தலங்கள்* 

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

       *மயானத் தலங்கள்* 

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

    *கைலாயத் தலங்கள்* 
தெட்சண கைலாசம்

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

    *பூலோக கைலாசம்* 

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

  *அழகிற் சிறந்த கோயில்கள்* 

1. *தேரழகு*     ---    திருவாரூர்
2. *வீதி அழகு*  ---    திருஇடை மருதூர்
3. *மதிலழகு*   ---    திருவிரிஞ்சை
4. *விளக்கழகு*  ---    வேதாரண்யம்
5. *கோபுரமழகு* --    திருக்குடந்தை
6. *கோயிலழகு* – காஞ்சி

 *பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு* 

1. *திருக்குற்றாலம்*  -- திருவனந்தல் சிறப்பு
2. *இராமேச்சுரம்*    --- காலை பூசை சிறப்பு
3. *திருஆனைக்கா*  --- மத்தியான பூசை சிறப்பு
4. *திரு ஆரூர்*     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. *மதுரை*         --- இராக்கால பூசை சிறப்பு
6. *சிதம்பரம்*       --- அர்த்தசாம பூசை சிறப்பு

 *திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்* 

குங்கிலியக்கலயர், 
முருகர், 
குலச்சிறை, 
அப்பூதி, 
நீலநக்கர், சிறுத்தொண்டர், 
நின்றசீர் நெடுமாறர், 
மங்கையர்க்கரசி, 
திருநீலகண்டயாழ்பாணர்.

 *நடராசர் அபிஷேக நாட்கள்* 

மார்கழி = ஆதிரை , 
சித்திரை = ஓணம், 
ஆனி = உத்திரம்.
 மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.  ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

 *ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்* 

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

 *ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள்* அமைந்து காணப்பெறும் ஒரே *தேவாரத் திருத்தலம்* 

 *திருநல்லூர்த்* திருத்தலம்.

 *அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்* 

“ *திருகண்டியூர் வீரட்டம்”* என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக *நந்தி விலகிய தலங்கள்* இரண்டு.

1. *திருப்பட்டீச்சரம்* , 
2. *திருப்பூந்துருத்தி* .

சிவன் சிறப்புத் *தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள்* ஆறு🙏

1.  *மயூர தாண்டவம்*  - மயிலாடுதுரை.

2. *அஞ்சிதபாத கரண தாண்டவம்-* செங்காட்டங்குடி.

3.   *கடிசம தாண்டவம்* - திருவக்கரை

4. *சதுர தாண்டவம்* - திருநல்நூர்.

5.  *சுந்தரத் தாண்டவம்-* கீழ்வேளூர்.

6. *லதா விருச்சிக தாண்டவம்-* திருமழபாடி

 *அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.* 

1. சம்பந்தர்,
 2 நாவுக்கரசர்,
 3. திருமூலர், 
4. நின்றசீர் நெடுமாறன், 
5. அப்பூதி, 
6. சோமாசிமாறர், 
7. மங்கையர்கரசி, 
8. நீலகண்ட யாழ்பாணர், 
9. மிழலைக்குறும்பர், 
10. கணநாதர், 
11. குலச்சிறை 
என 11 பேர் ஆவார்.

  *பெரிய கோபுரத் தலங்கள்* 

1. *திருவண்ணாமலை* 
2  *மதுரை* 
3. *தில்லை* 
4. *திருமுதுகுன்றம்* 
5. *திருச்செந்தூர்* 
6. *இராமேஸ்வரம்* 
7. *குடந்தை* 
8. *காளையார் கோவில்* 
9. *தென்காசி* 

 *மண்டபங்கள் சிறப்பு* 

1 *வேலூர்* - கல்யாண மண்டபம்
2 *கிருஷ்ணாபுரம்* - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
3 *தாரமங்கலம்* – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை.

 மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

 *யானை ஏறாத மாடக் கோயில்கள் சில* 

1.     *திருவானைக்காவல்* 
2.    *ஆக்கூர்* 
3.    *திருத்தேவூர்* 
4.    *திருக்கீழ்வேளூர்* 
5.    *சிக்கல்* 
6.    *வலிவலம்* 
7.   *அம்பர்மகாளம்* 
8.   *தண்டலை நீள் நெறி* 
9.   *திருநறையூர்* 
10. *பழையாரை* 
11. *திருமருகல்* 
12. *வைகல்மாடக்* கோயில்
13. *நன்னிலம்* (மதுவனம்)
14. *குடவாசல்* 
15. *புள்ளமங்கை* 
16. *திருத்தலைச்சங்காடு* 
17. *நல்லூர்* 
18. *திருநாலூர்* 
19. *திருச்சாய்க்காடு* 
20. *திருவக்கரை* 
21. *திருநாங்கூர்* 
22. *திருப்ராய்த்துறை* 
23. *ஆவுர்* 
24. *திருவெள்ளாறை* 
25. *திருவழுந்தூர்* 
26. *நாகப்பட்டினம்* 
27. *பெருவேளூர்* 
28. *கைச்சின்னம்* 
29. *சேங்கனூர்* இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

🙏  *பெரிய லிங்கம்* 🙏

1 *கங்கை கொண்ட சோழபுரம்* – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

 2. *திருப்புனவாயில்* – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை.

 “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.
            
🌷  *பெரிய நந்தி* 💥

1 *தஞ்சை* நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது.

 2. *லேபாட்சி வீரபத்திரர்* சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

                 🌺  *புகழ்பெற்ற கோயில்கள்* 

1 *கோயில்* – சிதம்பரம்

 2  *பெரியகோயில்* - தஞ்சை.

3 *பூங்கோயில்* – திருவாரூர்.

4 *திருவெள்ளடை* - திருக்குருகாவூர்.

5. *ஏழிருக்கை* சாட்டியக்குடி

6. *ஆலக்கோயில்* -திருக்கச்சூர்.

 7. *கரக்கோயில்* - திருக்கடம்பூர்.

 8. *கொகுடிக் கோயில்* - திருப்பறியலூர்

9. *மணிமாடம்* - திருநறையூர்
            
10. *தூங்கானைமாடம்* - திருப்பெண்ணாடகம்
           
 11. *அயவந்தீச்சரம்* -திருச்சாத்தமங்கை.

 12. *சித்தீச் சுரம்* - திருநறையூர்

🙏 *நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்* 

1.            *திருஞானசம்பந்தர்* - ஆச்சாள் புரம்.

2.            *திருநாவுக்கரசர்* - திருப்புகலூர்.

3.            *சுந்தரர்* - திருவஞ்சைக்களம்.

4.            *மாணிக்கவாசகர்* – தில்லை

 *சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்* 

1.   *மெய்கண்டார்* - திருப்பெண்ணாடகம்.

2. *அருள் நந்திதேவ நாயனார்* – திருத்துறையூர்.

3.   *மறை ஞான சம்பந்தர்* - பெண்ணாடகம்.

4.   *உமாபதி சிவம்* - சிதம்பரம்.

 *சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்* 

1. *மெய்கண்டார்* - திருவண்ணாமலை.

2.  *அருள் நந்திதேவ நாயனார்* – சிர்காழி

3.   *மறை ஞானசம்பந்தர்* - சிதம்பரம்

4.  *உமாபதி* *சிவம்* - சிதம்பரம்

   *பக்தர்கள் பொருட்டு* 

 1 *திருவிரிஞ்சியுரம்* - பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

 2. *திருப்பனந்தாள்* – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார். 

திருச்சிற்றம்பலம்🙏

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Sangabishekam


திருக்கழுக்குன்றம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
உடனுறை
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
கார்த்திகை மாத கடைசி சோம வார
1008 சங்காபிஷேகம் நடைப்பெற்றது
திருக்கழுக்குன்றம்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஸ்வாமி
உடனுறை
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
கார்த்திகை மாத கடைசி சோம வார
1008 சங்காபிஷேகம் நடைப்பெற்றது

வெள்ளி, 10 டிசம்பர், 2021

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Sangabishekam

திருக்கழுக்குன்றம்:-13.12.2021 திங்கள்கிழமை 1008 மஹா சங்காபிஷேகம்..
திருக்கழுக்குன்றம் மலைமேல் அமர்ந்திருக்கும் அருள்மிகு வேதகிரீஸ்வரருக்கு வருகின்ற 13.12.2021 திங்கள் கிழமை மதியம் 12.00 மணிக்கு மேல் 1008 மஹா சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்தில் தீபம் ஏற்றி சிவனை வழிபடுகின்றோம்.தீபத்தால் ஏற்படும் வெப்பம் குறைய சங்கால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. சங்கு என்பது புனித பாத்திரம் ஆகும். சங்காபிஷேகம் ஏன் திங்கள்கிழமைகளில் செய்யப்படுகின்றது.திங்கள் கிழமையானது சந்திரனுக்கு உரிய கிரகமாகும். சந்திரன் குளிர்ச்சியானவன். எனவே சங்காபிஷேகம் திங்கள் கிழமைகளில் செய்யப்படுகின்றது.மற்ற கோயில்களில் 108 சங்காலேயே அபிஷேகம் நடைபெறுகின்றது. சில கோயில்களில் மட்டும் 1008 சங்கால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. 1008 சங்கால் அபிஷேகம் செய்யப்படும் கோயில்களில் #திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.பிறவா வரம்வேண்டும் என இறைவனை வேண்டுவர்..சங்காபிஷேகம் பிறப்பறுக்கும் வழிபாடு. சங்காபிஷேகத்தை கண்டால் இனி அடுத்த பிறவி இல்லை என்று சொல்வார்கள்.நாமும் சங்காபிஷேகத்தினை தரிசித்து இனி பிறவா வரம் பெறுவோம்…
நமச்சிவாய..

வியாழன், 2 டிசம்பர், 2021

Arulmigu Vedhagiriswarar Temple prathosham

திருக்கழுக்குன்றம்
அருள்மிகு ஸீ திரிபுரசுந்தரி அம்மன்
உடனுறை
அருள்மிகு ஸீ வேதகிரீஸ்வரர் ஸ்வாமி 
அருள்மிகு ஸீ பக்தவச்சலேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில் 
கார்த்திகை மாத தேய்ப்பிறை பிரதோஷ வழிபாடு

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple chithirai thiruvizha

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple chithirai thiruvizha