திருக்கழுக்குன்றம்:-13.12.2021 திங்கள்கிழமை 1008 மஹா சங்காபிஷேகம்..
திருக்கழுக்குன்றம் மலைமேல் அமர்ந்திருக்கும் அருள்மிகு வேதகிரீஸ்வரருக்கு வருகின்ற 13.12.2021 திங்கள் கிழமை மதியம் 12.00 மணிக்கு மேல் 1008 மஹா சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்தில் தீபம் ஏற்றி சிவனை வழிபடுகின்றோம்.தீபத்தால் ஏற்படும் வெப்பம் குறைய சங்கால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. சங்கு என்பது புனித பாத்திரம் ஆகும். சங்காபிஷேகம் ஏன் திங்கள்கிழமைகளில் செய்யப்படுகின்றது.திங்கள் கிழமையானது சந்திரனுக்கு உரிய கிரகமாகும். சந்திரன் குளிர்ச்சியானவன். எனவே சங்காபிஷேகம் திங்கள் கிழமைகளில் செய்யப்படுகின்றது.மற்ற கோயில்களில் 108 சங்காலேயே அபிஷேகம் நடைபெறுகின்றது. சில கோயில்களில் மட்டும் 1008 சங்கால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. 1008 சங்கால் அபிஷேகம் செய்யப்படும் கோயில்களில் #திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.பிறவா வரம்வேண்டும் என இறைவனை வேண்டுவர்..சங்காபிஷேகம் பிறப்பறுக்கும் வழிபாடு. சங்காபிஷேகத்தை கண்டால் இனி அடுத்த பிறவி இல்லை என்று சொல்வார்கள்.நாமும் சங்காபிஷேகத்தினை தரிசித்து இனி பிறவா வரம் பெறுவோம்…
நமச்சிவாய..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
www.thirukalukundram.in